மோடியிடம் சொல்! கணவரை கொன்ற பயங்கரவாதிகள் சொல்லியனுப்பிய செய்தி!

Dinamani2f2025 04 232f21qylyeq2fmanjunath.jpg
Spread the love

மோடிக்கு அனுப்பிய செய்தி

கர்நாடகாவின் ஷிமோகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் – பல்லவி தம்பதியினர் மகனுடன் ஜம்மு – காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

பெஹல்காமில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் மனைவி, மகன் கண்முன்னே மஞ்சுநாத்தை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து பல்லவி கூறியதாவது:

“நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பெஹல்காமில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் கண்முன்னே அவரை கொன்றனர். கெட்ட கனவுபோல் இருக்கிறது.

நான்கு பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். என் கணவரை கொன்றதை போல் என்னையும் கொன்றுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அப்போது, உன்னை கொல்ல மாட்டேன், நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடன் போய் சொல் என்று ஒரு பயங்கரவாதி தெரிவித்தார்” என்றார்.

பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. சில பெண்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *