மோடியின் முதல் கையெழுத்து

Gpsyjphwkaap6cc
Spread the love

பிரதமர் மோடி 3-வது முறையாக நேற்று (9ந்தேதி)பதவியேற்றுக் கொண்டார்.

Gpplw0wbmaaxtmy

முதல் கையெழுத்து

இதைத்தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் தனது முதல் கையொப்பத்தை மோடி போட்டார்.
9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி விடுவிக்கும் வகையில் பி.எம் கிசான் நிதி’ எனப்படும் விவசாயகள் நலன் சார்ந்த திட்டத்தில் முதலாவதாக கையொப்பமிட்டுள்ளார்.
அப்போது பிரதமர் மோடி கூறும்போது, “இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். ரூ.20,000 கோடி இதில் விநியோகம் செய்யப்படும்.
வேளாண் மக்களின் நலனுக்காக எங்களது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்த வகையில் அது சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திடுவது தான் சரியாக இருக்கும்.
வரும் நாட்களில் வேளாண் மக்களுக்காகவும், வேளாண் துறை சார்ந்தும் கூடுதலாக பணியாற்ற உள்ளோம்” என்றார்.

அமைச்சரவை கூட்டம்

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார். முதல் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெற உள்ளது.

 

Gppmfa4bqaaepia

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலை தளத்தில் , 140 கோடி இந்திய மக்களுக்கு சேவையாற்ற தான் தயாராக உள்ளதாகவும். இந்தியாவை புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் தனது அமைச்சரவை செயல்படும் என்றும். இளமை மற்றும் அனுபவம் கலந்த வகையில் அமைச்சரவை சகாக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்: சோனியா காந்தி காங். நாடாளுமன்ற கட்சி தலைவராக தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *