இதன்மூலம், பொய்யான வாக்குறுதிகள் மூலம் இந்திய இளைஞர்களை, போருக்கு மறைமுகமாக மோடி அரசு அனுப்பி வைத்துள்ளது. முன்னதாக, ரஷியா-உக்ரைன் போரில் சேர பொய்யான ஏஜென்டுகளின் அழைப்புகளின்பேரில் சென்ற இந்திய இளைஞர்கள், தங்கள் உயிரை இழந்தனர்.
போர் நடக்கும் பகுதி என்றாலும்கூட, வேலை செய்வதற்கு அதிக சம்பளம் கிடைப்பதால் இந்திய இளைஞர்கள் வேறுவழியின்றி அங்கு செல்கின்றனர். இது மோடி அரசால் இந்தியாவில் நிகழும் பரவலான வேலையின்மையின் விளைவேயாகும்.
உயிரைப் பணயம் வைத்து, போர் நடக்கும் பகுதிகளில் இந்திய இளைஞர்கள் வேலை பார்ப்பது, மோடி அரசின் வேலைவாய்ப்புகள் குறித்த கூற்றையும், அவரது தோல்வியையும் காட்டுகிறது.