மோடி அரசுக்கு நன்றி: சமூக வலைதளங்களில் படத்தை மாற்றிய பாஜக தலைவர்கள்!

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி எனக் கூறி சமூக வலைதளப் பக்கங்களில் பாஜக தலைவர்கள் புகைப்படங்களை மாற்றியுள்ளனர்.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் நடுத்தர மக்கள் பயன்பெறுவதை சுட்டிக்காட்டும் வகையில், ஜிஎஸ்டி குறைப்பு மிகப்பெரிய பரிசு என்றும், பிரதமர் மோடி அரசுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டு படங்களை மாற்றியுள்ளனர்.

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று (செப். 22) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்மூலம், அன்றாட அத்தியாவசியப் பொருள்கள், சுகாதாரப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், கல்விப் பொருள்களின் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், ஆட்டோமொபைல்கள், விவசாயம், பொம்மைகள், விளையாட்டு மற்றும் கைவினைப்பொருள்கள், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், காப்பீடு போன்ற துறைகளில் ஜிஎஸ்டி வரி குறைகிறது.

இந்த ஜிஎஸ்டி குறைப்பு, நடுத்தர குடும்பங்கள் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கும், அதிகமாகச் சேமிக்க ஊக்குவிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தனது உரையில் தெரிவித்திருந்தார்.

நவராத்திரி, தீபாவளி போன்ற அடுத்தடுத்த பண்டிகை நாள்களையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளுக்கு மோடி அரசின் பரிசு என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சமூக வலைதளப் பக்கங்களில் பாஜக தலைவர்கள் தங்கள் முகப்புப் படங்களை மாற்றியுள்ளனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்கள் படங்களை மாற்றியுள்ளனர்.

இதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, ”ஜிஎஸ்டி குறைப்பு மிகப்பெரிய பரிசு, பிரதமர் மோடி அரசுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டு படங்களை மாற்றியுள்ளனர்.

இதையும் படிக்க | மாணவர்கள் நலனில் அரசியல் வேண்டாம்: அன்பில் மகேஸ்

Thank you to Prime Minister Modi’s government: BJP leaders who changed their image on social media

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *