மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் பெய்த கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
இதுகுறித்து உஜ்ஜையின் மாவட்ட குற்றவியல் நீதிபதி நீரஜ் குமார் சிங் கூறுகையில், “இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் இந்தூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மஹாகல் லோக் பகுதியின் கேட் எண் 4-க்கு அருகில் அமைந்துள்ள மஹராஜ்வாடா பள்ளியின் ஒரு பகுதி எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் இந்தச் சம்பவம் நடந்தது.
சிக்கிமில் கனமழை: கடும் நிலச்சரிவால் பாலங்கள் உடைந்தன!
மஹாராஜ்வாடா பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு எல்லைச் சுவரின் ஒரு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சுவர் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பலியாகினர். 2 பெண்கள் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் இந்தச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்ததுடன், “உஜ்ஜையினியில் உள்ள மகாகல் கோயிலின் கேட் எண் 4 அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.