இந்த ஆண்டு ஐ.பி.எல்.தொடரில் அனைத்து அணிகளும் அதிரடி காட்டி வருகின்றன. 250 ரன்களுக்கு மேல் எளிதாக குவித்து வருகின்றன. இதேபோல் அந்த இலக்கையும் விரட்டி பிடித்து எதிரணியினர் சாதித்து வருகின்றனர். இதனால் ஐ.பி.எல். போட்டியில் பவுலர்களின் நிலைதான் மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்கள் போடும் ஒவ்வொரு பந்தும் சிக்சர், பவுண்டரிகளாக பறக்கின்றன. நேற்று நடைபெற்ற கொல்கத்தா&பஞ்சாப் அணிகள் போட்டியிலும் ரன்வேட்டை நீடித்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 261 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடியா பஞ்சாப் அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 18.4 ஓவரில் 262 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இதில் பவுலர்களின் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருந்தது. இந்த நிலையில் பவுலர்களின் நிலையை பார்த்து கவலை அடைந்து உள்ள ராஜஸ்தான் அணியில் உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தல், பவுலர்களை யாராவது காப்பாற்றுங்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது.
யாராவது புவுலர்களை காப்பாற்றுங்கள்-அஸ்வின்
