இதுதொடர்பாகப் பேசிய அவர், “சினிமா ஒரு மிகச்சிறந்தத் துறை. இதில் யாருக்காவது எதிர்மறையான அல்லது கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால், அதற்கு அவர்களின் தனிப்பட்ட முடிவுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
நீங்கள் உங்கள் தொழிலில் தீவிரமாக இருந்தால், யாரும் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளப்போவதில்லை.

சினிமாவில் ‘casting couch’ ( வேலை வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல்) இல்லை. இதுப்போன்ற கலாசாரம் இங்கு இல்லை.
யாருக்காவது ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டால் அது அவர்களுடைய சொந்த தவறுதான்.
இந்தத் துறை ஒரு கண்ணாடி போன்றது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதையே அந்தக் கண்ணாடியில் காண்பீர்கள்” என்று பேசியிருக்கிறார்.
சிரஞ்சீவியின் இந்தப் பேச்சுக்கு எதிராகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.