'யாரும் நினைத்து பார்க்காத ஒரு வாழ்க்கை' – 82 வயதில் ஸ்கூட்டரில் பறக்கும் மந்தாகினி

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த 87 வயதான மந்தாகினி மூதாட்டி, தனது தங்கை உஷாவுடன் புத்துணர்வோடு ஸ்கூட்டரில் நகரை வலம்வரும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து மந்தாகினி பேசியது,

” அகமதாபாத்தில் வளர்ந்த நாங்கள் 6 சகோதர சகோதரிகள். அதில் நான் தான் மூத்தவள். எங்களுடைய தந்தை சுதந்திர போராட்ட வீரராக இருந்தவர். இந்தியா சுதந்திரம் அடைந்து பிறகு ஒரு தொழில் தொடங்க வேண்டும் என ஆசைப்பட்டார். பணம் இல்லாததால் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை.

எங்களை அம்மா தான் வளர்த்தார். கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. 16 வயதில் ஒரு பால் மந்திரியில் மாண்டேச்சரி ஆசிரியரானேன். எனக்கு பெரிதாக ஆங்கிலம் தெரியாது. ஆனால் சமூக நலத்திட்டங்களில் சேர்ந்தேன். பஞ்சாயத்து விவாதங்களில் அமர்வது, பெண்களுக்கு அவர்களின் உரிமையை கற்பிப்பது போன்ற பலவற்றில் செயல்படத் தொடங்கினேன்.

அதுமட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும் போது மொபெட் ஓட்டக் கற்றுக்கொண்டேன். பிறகு ஒரு ஜீப் ஓட்டக் கற்றுக்கொண்டேன். இறுதியாக, ஹேண்ட் ஸ்கூட்டரையும் வாங்கினேன். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒருமுறை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் எனக்கு வேறு திட்டங்கள் இருந்தன. நான் அந்த ஓட்டத்துடனே சென்றேன். இன்றைக்கு எங்களைப் பார்த்து நிறைய பேர் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த சமூகம் எனக்காக கற்பனை செய்து பார்க்காத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட்டேன்” என பெருமைப்பொங்க சொல்கிறார் மந்தாகினி.

இந்நிகழ்வு குறித்து மந்தாகினி ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பேயுடன் பேசிய போது,

” இந்த நகரத்துச் சாலைகளில் ஸ்கூட்டரில் பறப்பது எனக்கு அத்தனை பிரியம். 87 வயதில் ஏன் ஸ்கூட்டரை ஓட்டுகிறீர்கள் என்று மக்கள் கேட்கும்போது, “ஏன் கூடாது?” என்று கேட்பேன். இந்த உலகில் வாழ்வதற்காக சிரமப்படுவதும் உழைப்பதும் ஒருபுறம் இருந்தாலும், முழுமையான சுதந்திரத்தை அனுபவிப்பதும் வாழ்க்கையே” என புத்துணர்வு தருகிறார். சமூக வலைத்தளத்தில் இவர்களின் தன்னம்பிக்கையும் உழைப்பையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *