யாரை ஏமாற்ற இந்த ஆணையம்? – அண்ணாமலை கேள்வி | annamalai questions about honor killing commission

1380129
Spread the love

சாதி, ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரைகளை அளிக்க ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ‘ஏற்கெனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முதல்வர் தலைமையில் ஒரு குழுவை அறிவித்தார்கள்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய அந்தக் குழு, கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே கூடியிருக்கிறது. குழுவின் தலைவரான முதல்வர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்? இது தவிர, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, ஏடிஜிபி தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைப்பது யாரை ஏமாற்ற?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *