தொடர்ந்து, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன என்று அவர்களும் அறிவிக்கவில்லை.
இன்னும் பல கட்சிகள் அங்கு சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள்.

எதுவுமே முடிவாகவில்லை, அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்தக் கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம்.
ஆனால் தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்