இந்நிலையில், 200 காவல்துறையினர் நிஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுமென முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், கையில் ஆயுதங்கள் வைத்திருந்த 102 ரோமா அணியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அனைத்து ஆயுதங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
காவல்துறையின் விரைவான நடவடிக்கையினால் பொதுச் சொத்துகள் எந்தவிதமான சோதாரமில்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளன.
போட்டி நடைபெறும் புதன்கிழமை அன்று 400 காவல்துறை பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
மூன்றாண்டுக்கு முன்பாக நிஸ் அணிக்கும் ஜெர்மனியின் கோலோக்னே கிளப்புக்கும் இடையிலான போட்டியின்போது 32 பேருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.