இந்தியாவில் யுபிஐ மூலமாக ஒரேநாளில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் புதிய சாதனையாக, கடந்த ஆக. 2 ஆம் தேதி இந்தியாவில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது போன்பே, கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, யோனா எஸ்பிஐ போன்ற வங்கி செயலிகள் உள்ளிட்ட அனைத்து செயலிகளும் அடங்கும்.
கடந்த 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2023ல் 35 கோடியாக இருந்த எண்ணிக்கை கடந்த 2024 ஆகஸ்டில் 50 கோடியாக அதிகரித்த நிலையில் தற்போது 70 கோடியாக உயர்ந்துள்ளது.