‘யூத்’ நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு: சூர்யாவைச் சந்தித்த அந்தத் தருணம் பற்றி உருக்கம்! |’Youth’ Actress’s Touching Post: An Emotional Reflection on the Moment She Met Suriya!

Spread the love

சிறை படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் கடந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகை அனிஷ்மா. சிறைப் பட வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் யூத் திரைப்படமும், அதில் இவர் நடித்த கதாப்பாத்திரமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகை அனிஷ்மா நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை எனப் பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆதர்ச நாயகனை நேரில் சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “2005-ஆம் ஆண்டு முதல் என்னை வெட்கப்பட வைத்தவர் சூர்யா. பள்ளிக்குச் செல்லும் முன்பு தினமும் காலையில் “சுற்றும் விழிச் சுடரே’ பாடலைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். அவரது சுவரொட்டிகளை என் வீட்டுச் சுவர்களில் ஒட்டி வைத்திருந்தேன். ஒரு சிறந்த நடிகராகவும், நல்ல மனிதராகவும் அவரை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். இறுதியாக, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *