“‘யூத்’ படத்தில் இனி வேலை செய்ய முடியாது என்பது என்னால் நம்ப முடியவில்லை!” – கென் கருணாஸ் |”I can’t believe I can’t work on ‘Youth’ anymore!” – Ken Karunas

Spread the love

அந்தப் பதிவில், “சினிமா மீது நான் காதல் கொண்ட நாள் முதல், மற்ற அனைத்தும் மெல்ல மெல்ல இரண்டாம் பட்சமாகிவிட்டன. அது வெறும் பார்வையாக மட்டும் இல்லை. என் வாழ்க்கையின் ஒன்றாக மாறிவிட்டது.

எனக்கு இப்போது 24 வயது. ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வரை, என்னுடன் தங்கியிருந்த ஒரே விஷயம் சினிமாதான். எந்தவொரு சூழலிலும் சினிமா என்னை கைவிடவில்லை. ‘யூத்’ படத்தில் இனி வேலை செய்ய முடியாது என்பது என்னால் நம்ப முடியவில்லை.

இவ்வளவு நாட்கள் அது என் சொந்த குழந்தை போலவே இருந்தது. இத்தனை நாட்களாகத் தூங்கும் வரை அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஹீரோவாக, அழகான ஒரு கதையில் வாழ்ந்தேன்.

ஒரு இயக்குநராக, என்னுடைய சொந்த பாதையைக் கண்டடைந்தேன். ஒவ்வொரு ஃப்ரேமும் என் மனதுக்கு நெருக்கமானதாக இருந்திருக்கிறது. இந்தப் படம் என்னை உடைத்த நாட்களும் இருந்தன. என்னை உருவாக்கிய நாட்களும் இருந்தன.

ஆனால் எப்போதும் நான் ஏன் சினிமா பயணத்திற்கு வந்தேன் என்பதை இப்படம் நினைவூட்டி கொண்டே இருந்தது. இந்தப் படத்தை உங்களை மனதில் வைத்துத்தான் உருவாக்கினேன். நீங்கள் எங்கு புன்னகைப்பீர்கள், எங்கு என்னோடு இணைவீர்கள், எப்படி உணர்வீர்கள் என எப்போதும் யோசித்துக்கொண்டே இருந்தேன். என்னுடையதாக ‘யூத்’, உங்களுடையதாக மாறுகிறது. அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் அதனை நேசித்ததைவிட, அதிகமாக நேசியுங்கள்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *