மேலும், இப்படத்தில் நடிகை அஞ்சலி, கும்பலங்கி நைட்ஸ் திரைப்பட நடிகை கிரேஸ் ஆண்டனி, நடிகர் அஜு வர்கீஸ், பாடகர் விஜய் ஜேசுதாஸ் மற்றும் மாஸ்டர் மிதூல் ரயான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படம், வரும் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பறந்து போ படத்தின் ’சன் ஃபிளவர்’ பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்பாடலுக்கான வரிகளை மதன் கார்க்கி எழுத, விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
இதையும் படிக்க: டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!