ரஜினிக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா

Rajinikanth230524 3
Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சமீபத்தில் அவர் ஐக்கிய அமீரக நாட்டிற்கு சென்றார்.

நடிகர் ரஜினிக்கு கோல்டன் விசா

அங்கு ரஜினி ஓய்வு எடுத்து வரும் நிலையில் லூலு குழுமத்தின் தலைவரை சந்தித்து அவருடன் காரில் சென்ற புகைப்படம் வீடியோ சமூகவலைதளத்தில் வைரல் ஆனது.
இதற்கிடையே ஐக்கிய அமீரக அரசு ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. இன்று(23ந்தேதி) அபுதாபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஐக்கிய அரபு அமீரக கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடிகர் ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது.

வீடியோ வைரல்

இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் கலக்கி வருகின்றன.மேலும் நடிகர் தனக்கு கோல்டன் விசா வழங்கியதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இதுவும் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் கமல், காஜல் அகர்வால், சிம்பு, பார்த்திபன், டிடி உள்பட பல தமிழ் திரை உலக பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது .இந்த விசாவை பெற்றவர்கள் 10 ஆண்டுகள் அந்தநாட்டின் குடிமகன்கள் போலவே கவுரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *