ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?

Dinamani2f2024 09 232fwy3k8q3h2fscreenshot 2024 09 23 174404.png
Spread the love

நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக். 10 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், விரைவில் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் ரஜினி நடித்து வருகிறார்.

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

இந்த நிலையில், மலையாளத்தில் உருவாகி ரூ. 175 கோடி வசூல் ஈட்டிய 2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப், ரஜினிக்கு கதை கூறியுள்ளதாகவும் இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜூட் ஆண்டனி ஜோசஃப் தமிழில் லைகா நிறுவனத்துக்கு படத்தை இயக்குவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நெஷனல் நிறுவனம் ஜூட் ஆண்டனி – ரஜினி கூட்டணியை தயாரிக்க முன்வந்துள்ளதாம்!

கோட் படத்தின் ‘மட்ட’ விடியோ பாடல்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *