Last Updated:
கூலி படத்தை மே, ஜூன் அல்லது ஆகஸ்டில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் ‘கூலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருப்பதால் ‘கூலி’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இந்த படத்தில் தேவா என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
அவருடன் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள திரை உலகின் ஷோபின் சாகிர், ஸ்ருதிஹாசன் படத்தில் இடம்பெற்றுள்ளனர். கேமியோ ரோலில் ஆமீர்கான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஆமீர் கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகின.
இந்த நிலையில், ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக 21 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் படத்தை மே, ஜூன் அல்லது ஆகஸ்டில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ‘கூலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கம் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ‘கூலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ தளம் சுமார் 120 கோடி ரூபாய் கொடுத்து பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
March 17, 2025 10:00 PM IST
