இயக்குநர் மற்றும் நடிகர் அபிஷன் ஜீவிந்த், “இந்த இடத்துல என்னுடைய முதல் நன்றியை சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்குச் சொல்லிக்கிறேன். முதல்ல இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முதல்ல ஓகே சொல்லிட்டேன்.
பிறகு வந்த விமர்சனங்கள் என்னை பாதித்தது. பிறகு ரஜினி சாரை மீட் பண்ணும்போது, அவர்தான் ‘நீ நடி கண்ணா’னு சொன்னாரு. அந்த வார்த்தை என்னுடைய இன்செக்யூரிட்டியை உடைச்சது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீஸுக்கு முன்னாடியே இந்தப் படத்துல நான் நடிக்கணும்னு இயக்குநர் மதன் கேட்டாரு. என்மேல வச்ச நம்பிக்கைக்கு நன்றி. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்குப் பிறகு எனக்கு மரியாதை கிடைச்சது.
அதுபோல, இரண்டு மடங்கு அதிகமாக இயக்குநர் மதனுக்கும் மரியாதை கிடைக்கும். என்னை பொறாமைப்பட வைப்பது மாதிரியான காட்சிகள் படத்தின் இரண்டாம் பாதியில இருக்கு.
நான் மெட்ரோ ரயில்லதான் முன்னாடி பயணிப்பேன். இன்னைக்கு அங்கு என்னுடைய முகம் அதுல இருக்கு. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்னுடைய மனைவி அகிலா அபிஷன் ஜீவிந்துக்கு நன்றி.
நான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கி ஃபேமஸ் ஆனதைவிட, அவங்க புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்.
நான் என்ன தவறுகள் பண்ணினாலும், அது நான் செய்த பாவங்களின் பிரதிபலிப்புனு நான் நினைக்கிறேன். எனக்கு என்ன நல்லது நடந்தாலும் அதுக்குக் காரணம் அகிலாதான்” எனப் பேசினார்.