“ரஜினி திரையுலகின் சூப்பர் ஸ்டார்; நான் அரசியலில் சூப்பர் ஸ்டார்” – சீமான் | seeman about meeting with rajinikanth

1341298.jpg
Spread the love

சென்னை: ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் ரஜினி திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த உடன் பயந்து விட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் புதன்கிழமை (நவ.27) சீமான் பேசியதாவது: “நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குதான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த உடன் பயந்து விட்டார்கள்.

நான் இல்லையென்றால் எட்டு வழிச் சாலை வந்திருக்கும். நான் இல்லையென்றால் பரந்தூரில் விமான நிலையம் கட்டி இருப்பார்கள். நான் இல்லையென்றால் காட்டுப் பள்ளியில் துறைமுகம் கட்டி இருப்பார்கள். ஆனால் நானும் என் படையும் இருக்கும் வரை உங்களால் இவற்றை கட்டிவிட முடியுமா? நான் சாத்தியமில்லாததை பேசுவேன் என்று சொல்கிறார்கள். சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியப்படுத்துபவனுக்கு பெயர்தான் புரட்சியாளன்” இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் சீமான் அவரை நேரில் சந்தித்து உரையாடினார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் விவாதத்தை கிளப்பியது. இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சீமான், ரஜினியுடன் அரசியல் சூழல் குறித்து உரையாடியதாக தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *