ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்துள்ளது. அணியை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ரஞ்சி கோப்பையில் விளையாடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா
ரஞ்சி கோப்பையில் ஜம்மு – காஷ்மீருக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வருகிற ஜனவரி 23 ஆம் தேதி விளையாடவுள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு எதிரான இந்தப் போட்டியில் விளையாடவுள்ளதை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.