பாருவிற்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அவரது பாதுகாவலரான கம்ருதீனும் எழுந்து கத்த “உக்காரு கம்ருதீன்” என்று ரம்யா சொல்ல, இருவருக்கும் சண்டை மூண்டது. ‘போடா.. போடி’ என்று ஏகவசனத்தில் பேசிக் கொண்டார்கள். பாருவின் அட்ராசிட்டியைத் தாங்க முடியாத ரம்யா, ஒரு கட்டத்தில் ‘எதிர் டீம் முன்னாடியே என்னை அசிங்கப்படுத்தறீங்களா.? கால்ல வேணா விழறேன்’ என்று எரிச்சலோடு பாருவின் காலில் விழுந்து விட்டு பிறகு அழுது கொண்டிருந்தார்.
வீட்டு தல ரம்யாவை, கம்ருதீன் அவமரியாதையாக பேசியதால், திவ்யா எழுந்து வந்தார். ‘தல பேசும் போது மதிக்க மாட்டீங்களா..?” என்று பொதுவாக கேட்க, அதை தனக்கானதாக எடுத்துக் கொண்ட கம்ருதீன் “அவளை இதுல வர வேணாம்ன்னு சொல்லுங்க..” என்று ஆட்சேபிக்க திவ்யாவிற்கும் கம்ருதீனுக்கும் பயங்கர சண்டை ஆரம்பித்தது. “நீ வெளியே கிளம்பு.. நீ கிளம்பு” என்று இருவரும் மோதிக் கொள்ள, எரிச்சல் தாங்காமல் கையில் இருக்கும் பொருளை தூக்கி எறிந்தார் திவ்யா “என்னை அடிக்க வரா.. பாத்தீங்களா?” என்று உக்கிரமான கம்ருதீன் ஆபாச வார்த்தைகளை இறைத்தார்.
“வார்த்தைகளை விடாத கம்ருதீன்” என்று பிரஜன் தடுத்தாலும் கம்மு அடங்கவில்லை. கூட இருந்து பாரு, கம்முவை தள்ளிக் கொண்டு செல்ல “பாரு.. நீயும் ஒரு பொண்ணுதானே.. இதைக் கேட்க மாட்டியா?” என்று திவ்யா பொங்க “அது வந்து.. நானும் சொல்லிட்டுதான் இருக்கேன்” என்று பம்மினார் பாரு. “அவங்க ரெண்டு பேரும் பண்ணதுக்கு வீக்கெண்டுல கிடைக்கும். நீங்க அமைதியா இருங்க” என்று திவ்யாவை சமாதானப்படுத்தினார் எஃப்ஜே.
கம்ருதீன் செய்யும் அட்ராசிட்டி பற்றி வெளியில் பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த வாரம் வீக்கெண்ட்ல கம்ருதீன் நல்லா வாங்கி கட்டிக்கப் போறான். அந்த அளவுக்கு வார்த்தையை விட்டிருக்கான்” என்றார் பிரஜன். (இவரே முன்னர் அப்படி அடி வாங்கியவர்தானே?!) “கெமியைக் கூட அடிக்கப் போயிருக்கான். என்னையும் அடிக்க வந்திருக்கான்” என்று பொங்கினார் ஆதிரை.
ஆக.. பிக் பாஸ் கழுவி கழுவி ஊற்றியும் கூட, ஒரு FUN TASK-ஐ மீண்டும் மீண்டும் சண்டை போட்டு சந்தைக்கடையாக மாற்றிய பெருமை போட்டியாளர்களைச் சாரும். ‘அகங்காரம்’ என்பதைக் கழற்றி வைக்காமல் மனித குலத்தில் சமாதானம் ஒன்று வரவே சாத்தியமில்லை.!