ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் முதல் நாளையொட்டி இன்று 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வரிசையில் காத்திருந்தபடி சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், விபூதி, மஞ்சள், அரசி மாவு, பஞ்சாமிர்தம், சொர்ணம் மற்றும் கலச அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொடி மரத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்து கோவில் அர்ச்சகர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்கள் முன்னிலையில் ஏற்றி வைத்து, சிறப்பு தீபாராதனை காட்டி, கந்த சஷ்டி பெருவிழாவைத் தொடங்கி வைத்தனர்.
மேலும் 7 நாள்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் மற்றும் மஹா தீபாராதனையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியதை அடுத்து ரத்தனகிரி உள்பட பல்வேறு பிற மாவட்டங்களான வேலூர், சென்னை, ஈரோடு திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆரணி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சஷ்டி விரதத்தில் கலந்துகொண்டு அரோகரா அரோகரா அரோகரா என கோஷங்களை எழுப்பியவாறு நீண்ட வரிசையில் காத்திருந்தபடி முருகப்பெருமானை மனமுருகி வழிப்பட்டுச் சென்றனர்.
ம் கொண்டுசெல்ல போலீஸ் வாகனங்கள்: பவார் குற்றச்சாட்டு!