தனது யூடியூப் சேனனில் பேசிய ஆகாஷ் சோப்ரா, “நீங்கள்தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஒரு கேப்டனின் வேலை டாஸ் போடுவதும், பந்துவீச்சாளர்களை நிர்வகிப்பதும், வியூகம் வகுப்பது மட்டுமல்ல.
முதல் நான்கு இடங்களுக்குள் பேட்டிங் இறங்கினால், ரன் அடிப்பதுதான் உங்களின் முக்கியமான வேலை.
கடந்த 17 இன்னிங்ஸ்களில் உங்களின் ஆவரேஜ் 14, ஸ்ட்ரைக் ரேட்டும் அவ்வளவு சிறப்பாக இல்லாவில்லை, ஒரு அரை சதம்கூட அடிக்கவில்லை. வெறும் இரண்டு முறை மட்டுமே 25 ரன்களைக் கடந்துள்ளீர்கள்.
சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து சந்தேகம் உள்ளது என்றோ அல்லது அடுத்த உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக அவர் இருக்க மாட்டார் என்றோ நான் சொல்லவில்லை. அதை நான் பரிந்துரைக்கவுமில்லை.
ஆனால் உண்மை என்னவென்றால் அவர் ரன்கள் எடுக்க வேண்டும். 3-வது அல்லது 4-வது இடத்தில் இறங்கி ரன் அடிக்கவில்லை என்றால், அதுவும் தொடர்ச்சியாக ரன் அடிக்கவில்லை என்றால், உலகக் கோப்பை தொடங்கும் போது அந்த அளவுக்கு நம்பிக்கையுடன் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.
எனவே, கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ரன் அடிப்பது முற்றிலும் அவசியம்” என்று கூறியிருக்கிறார்.