ரமலான் பண்டிகை: ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Dinamani2f2025 03 312f9quqld0m2f20250330175l.jpg
Spread the love

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சந்தைகள் நாள் முழுவதும் திறந்திருக்கும்.

பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறுதைத் தடுக்க ஜம்மு – காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர்.

மேலும், வாகனங்களில் செல்வோர் அனைவரையும் நிறுத்தி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | நாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம்

ஜம்மு – காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் இன்று பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *