ரம்மியால் மருத்துவ மாணவர் தற்கொலை

Sss
Spread the love

செல்போன்கள் தற்போது எமனாக மாறி வருகிறது. செல்போனுக்கு அடிமையாகி கிடக்கும் பலர் அதில் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இதல் ஜெயித்தவர்களை விட பணத்தை இழந்தவர்கள் தான் அதிகம். எனினும் இந்த ஆன்லைன் விளையாட்டு மோகம் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட வி¬ளாயட்டில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

ஆன்லைன் ரம்மி

சென்னை, கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் முனுசாமி மகன் தனுஷ் (வயது 23). இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து வந்தார்.

தொடர்ந்து ரம்மி விளையாடுவதற்கு பணம் இல்லாததால் அவரது தந்தையிடம் ரூ.24 ஆயிரம் பணம் கேட்டார். ஆனால்அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை ரூ.4 ஆயிரம் பணம் மட்டும் உள்ளது என்று கூறி ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்தார்.

தற்கொலை

இதையடுத்து வீட்டில் உள்ள அறைக்கு சென்ற தனுஷ் வெளியே வராததால் வீட்டில் உள்ளவர்கள் அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்க வில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனுஷ் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சட்டங்கள் இயற்றியது .எனினும் தமிழக அரசு இயற்றிய சட்டப் பிரிவுகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *