கிழக்கு ரயில்வே மண்டலத்திற்கு உள்பட்ட ரயில்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 1,400 ஆண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
கிழக்கு ரயில்வே மண்டலத்தின் ரயில்களில் பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட பெட்டிகளிலும், பெண்களுக்கான சிறப்பு ரயில்களிலும் அக்டோபர் மாதத்தில் மட்டும் பயணித்த 1,400 ஆண் பயணிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில் அதிகபட்சமாக சியால்தாவில் 574 பேரும், அசன்சோலில் 392 பேரும், ஹவுராவில் 262 பேரும், மால்டாவில் 176 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் ஆண்களுக்கு அபராதம் முதல் சிறைத் தண்டனை வரையிலான குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.