அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவமனை பணியாளர் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், விண்டர்பேட்டையைச் சேர்ந்தவர் சாம் டேவிட் நேசகுமார் (46). வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இவர் திங்கள்கிழமை காலை பணிமுடித்து ஏலகிரி விரைவு ரயிலில் அரக்கோணம் திரும்பினார். ரயில்நிலையத்தில் ரயில் நிற்கும் முன்பே ஓடும் ரயிலில் இருந்து சாம் டேவிட் இறங்க முயற்சித்தார்.