இந்நிலையில், அப்பகுதியில் ரயில் மீது யானைகள் மோதுவதைத் தடுக்க வன விலங்கு ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இலங்கை ரயில்வே அதிகாரிகள் இணைந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து இலங்கை ரயில்வே துறையின் உயர் அதிகாரி பி எஸ் பொல்வட்டாகே கூறுகையில், ரயில்வே துறை அதன் 160 ஆண்டுக்கால வரலாற்றில் இயற்கை வளங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இது போன்ற ரயில் விபத்துகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 138 யானைகளும் கடந்த 17 ஆண்டுகளில் 1,238 யானைகளும் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில் ஓட்டுநர்களுக்கு சிறந்த தெரிவுநிலையை வழங்குவதற்காக தண்டவாளத்தின் இரு பக்கங்களையும் சுத்தம் செய்வது மற்றும் யானைகள் சிக்கிக் கொள்வதைத் தடுக்க தண்டவாளத்தில் உள்ள இடங்களை நிரப்புவது போன்ற நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டின் கணக்குப்படி இலங்கையில் மொத்தம் 5,800 யானைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.