கீவ்: ரஷியாவை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று உக்ரைன் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்தம் மேற்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாள்களுக்கு முன் எச்சரித்ததற்குப் பிறகும், உக்ரைன் மீது ரஷியா தீவிர வான்வழித் தாக்குதலை புதன்கிழமை அதிகாலை வரை தொடா்ந்தது.