ரஷியா – உக்ரைன் போர்: இந்தியா, சீனாவின் முதன்மை நிதியே காரணம்

Spread the love

ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டம் நியூயார்க் நகரில் இன்று (செப். 23) நடைபெற்றது. இதில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுப் பேசினார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு இக்கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்கிறார்.

இதில், எல்லை ஊடுருவல், சட்டவிரோத குடியேற்றம், உக்ரைன் போர் ஆகியவை குறித்து டிரம்ப் பேசியதாவது,

”உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் போருக்கு முதன்மை நிதியாளர்களாக சீனாவும் இந்தியாவும் உள்ளனர். அவர்கள் ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்து தொடர்ந்து வணிகம் மேற்கொள்வதால் ரஷியாவுக்கு மறைமுகமாக நிதியளித்து உதவுகின்றன.

ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவிடமிருந்து எரிசக்தி கொள்முதல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். இவர்கள் ரஷியா உடனான வணிகத்தை நிறுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால், நாம் அதிக நேரத்தை வீணடிக்கிறோம் என்று பொருள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *