இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 30 நாள் போர்நிறுத்த திட்டத்தில் கையெழுத்திட ரஷிய அதிபர் புதினை வற்புறுத்த அமெரிக்க நிர்வாகம் முயற்சித்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷிய அதிபர் விளாதீமிர் புதினும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார்.
எனவே அமெரிக்காவின் நீண்ட முயற்சிக்குப்பின் 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து ரஷியாவையும் இந்த போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்க வைக்க டிரம்ப் முயன்று வருகிறார். இதற்காக உயர்நிலைக்குழு ஒன்றையும் அவர் ரஷியாவுக்கு அனுப்பி வைத்தார். இதில் அடுத்தகட்ட நடவடிக்கையாக ரஷிய அதிபர் புதினுடன், டிரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுபற்றி வெள்ளை மாளிகையின் துணைத் தலைவர் டான் ஸ்கேவினோவின் கூறுகையில், அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த தொலைபேசி பேச்சுவார்த்தை அழைப்பு நன்றாக சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!