ரஷியா உடனான போரை 30 நாள்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம்!

Dinamani2f2025 03 122fq7h89jd22fglye0afwgaaqcf .jpg
Spread the love

ரஷியா உடனான போரை 30 நாள்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் அதிபர் அலுவலகத் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக, ரஷிய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் – உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது. அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

இந்த நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ முன்னிலையில், அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறுகையில், “உக்ரைன் அனைத்துக்கும் தயாராக இருக்கிறது. துப்பாக்கிச் சண்டையை நிறுத்திவிட்டு ஆம்.. இல்லை என்று சொல்லும் நிலையில் தான் உக்ரைன் இருக்கிறது” என்றார்.

இதையும் படிக்க: இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *