ரஷியா தொடங்கிய போரை நிறுத்துவதற்கு உலக வல்லரசு நாடுகள் உதவுமாறு கேட்டுக்கொண்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, போரை நிறுத்த உதவாவிட்டால் ஆபத்தான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றி ஸெலென்ஸ்கி, உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் உதவ வேண்டும் என வலியுறுத்தினார், போர் நிறுத்தப்படவில்லை என்றால் இந்தப் போர் ஒரு ஆபத்தான ஆயுதப் போட்டியை கட்டவிழ்த்துவிட உதவுவதாக எச்சரித்தார்.
உக்ரைனில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் அசுரத்தனமான புதுமைகளை விவரிக்கும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவின் வருகை மனித வரலாற்றில் நடந்து வரும் ஆயுதப் போட்டி “மிகவும் அழிவுகரமானது” என்று ஜெலென்ஸ்கி கூறினார். மேலும் ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிகள் தேவை என ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
மேலும், ரஷிய அதிபர் புதின் போரை உக்ரைனுக்கு அப்பாலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் எளிய ட்ரோனை முதலில் யார் உருவாக்குவார்கள் என்று யோசிப்பதை விட ரஷியாவிடம் இப்போது போரை நிறுத்த வலியுறுத்துவதே மேலானது என்று 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் கூறினார்.
மேலும், “மனித வரலாற்றில் மிகவும் அழிவுகரமான ஆயுதப் போட்டியை நாம் இப்போது சந்தித்து வருகிறோம், ஏனெனில் அதில் செயற்கை நுண்ணறிவு வருகை அளப்பறியது,” என்று அவர் கூறினார். ஆனால் உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் “நண்பர்களும் ஆயுதங்களும்” மட்டுமே என்று கூறினார்.
“உலகம் அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் கூட பதிலளிக்க முடியாவிட்டால், சர்வதேச பாதுகாப்பிற்கான வலுவான தளம் இல்லையென்றால், பூமியில் அமைதி இருக்குமா?”
“சர்வதேச நிறுவனங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால், இந்த பைத்தியக்காரத்தனம் தொடர்கிறது.” நீண்டகால ராணுவ கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தாலும் கூட நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல,” என்று மேலும் அவர் கூறினார்.
உக்ரைனுக்கு அதன் ராணுவ உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தியவர், சர்வாதிகாரிகள் அணிவகுப்புகளில் காட்டுவதற்காக பெரிய, பெரிய திறன்கள் கொண்ட ஏவுகணைகள் உக்ரைனில் இல்லை, ஆனால் 2,000, 3,000 கிலோமீட்டர் வரை பறக்கக்கூடிய ட்ரோன்கள் எங்களிடம் உள்ளன.
“எங்கள் வாழ்க்கை உரிமையைப் பாதுகாக்க அவற்றை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.” உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்யும் நேட்டோவின் திறன் குறித்து சந்தேகம் எழுப்பிய ஜெலன்ஸ்கி, ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்பாராத விதமாக ரஷியாவை தோற்கடிக்க முடியும் என்று கூறியதை பாராட்டினார்.