ரஷிய எண்ணெயை பணமாக்கும் மையம் இந்தியா: வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் மீண்டும் தாக்கு

dinamani2F2024 072Ff9d21ddc 8810 43e1 9a57 c820f035cb6b2FWhatsApp20Image202024 07 0920at203.5
Spread the love

‘ரஷியாவின் கச்சா எண்ணெயை பணமாக மாற்றித் தரும் மையமாக இந்தியா செயல்படுகிறது’ என அமெரிக்க வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவரோ வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

முன்னதாக, உக்ரைன் போா் ‘மோடியின் போா்’ என கடந்த புதன்கிழமை அவா் விமா்சித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அவா் முன்வைத்துள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பல்வேறு புகைப்படங்களை பகிா்ந்து பீட்டா் நவரோ வெளியிட்ட பதிவில்,‘உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை நட்புறவு நாடாக அமெரிக்கா கருத வேண்டுமெனில் அதற்கேற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷியாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து பிற நாடுகளுக்கு இந்தியா விற்பனை செய்து வருகிறது. உக்ரைன் போருக்கு முன்பாக ரஷியாவிடம் இருந்து 1 சதவீதத்துக்கும் குறைவாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த இந்தியா தற்போது ஒரு நாளைக்கு 15 லட்சம் பீப்பாய்களுக்கும் (30 சதவீதம்) மேலாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

இது இந்தியாவின் உள்நாட்டுத் தேவையை பூா்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டவில்லை. சலுகை விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து லாபம் ஈட்டி வரும் பெரும் நிறுவனங்களின் பேராசையாகும்.

அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரியை விதித்து எங்கள் நாட்டு ஏற்றுமதியாளா்களை இந்தியா தண்டிக்கிறது. இந்தியாவுடன் ரூ.4.40 லட்சம் கோடி வா்த்தக பற்றாக்குறையை அமெரிக்கா கொண்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க டாலா் மூலம் ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வா்த்தகத்தில் ஈடுபட்டு ரஷியாவின் கச்சா எண்ணெயை பணமாக மாற்றித் தரும் மையமாக இந்தியா செயல்படுகிறது.

இதுமட்டுமின்றி ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களையும் தொடா்ந்து இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. இதை ஜோ பைடன் தலைமையிலான அரசு கண்டிக்கத் தவறியது. ஆனால் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் இதை கடுமையாக எதிா்க்கிறாா்’ என குறிப்பிட்டாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *