ரஷிய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ரஷியா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளிக்காததால், ரஷியா மீது பொருளாதார தடையை அமெரிக்க அரசு விதித்து வருகின்றது. ரஷியாவிடம் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது.
டிரம்பின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தால் இந்தியாவுக்கு 25% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், இந்தியா மற்றும் ரஷியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்கள் என்று டிரம்ப் விமர்சித்திருந்தார்.