ஜஃப்ரானி பனீர் ரோல், பாலக் மேத்தி மட்டர் கா சாக், தந்தூரி பர்வான் ஆலு, ஆச்சாரி பைங்கன் மற்றும் மஞ்சள் தால் தட்கா, உலர் பழங்கள் மற்றும் குங்குமப்பூ புலாவ் ஆகியவற்றுடன் லச்சா பரந்தா, மகஸ் நான், சதனாஜ் ரொட்டி, மிஸ்ஸி ரொட்டி மற்றும் பிஸ்கு போன்ற இந்திய ரொட்டிகளுடன் பிராதான உணவு வழங்கப்பட்டிருக்கிறது.

பாதாம் கா ஹல்வா, கேசர்-பிஸ்தா குல்ஃபி, புதிய பழங்கள், குர் சந்தேஷ், முரக்கு போன்ற பாரம்பரிய உணவுகளுடன், பல்வேறு ஊறுகாய்கள் மற்றும் சாலடுகள் உள்ளிட்டவைகளுடன் மாதுளை, ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி சாறுகள் அடங்கிய ஜூஸ்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பரிமாரப்பட்டிருக்கின்றன.
விருந்தை முடித்த கையோடு இந்திய பரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. “அமிர்தவர்ஷினி’, ‘காமஜ்’, ‘யமன்’, ‘சிவரஞ்சினி’, ‘நளினகாந்தி’, ‘பைரவி’ மற்றும் ‘தேஷ்’ போன்ற இந்திய ராகங்களும், கலிங்கா மற்றும் சாய்கோவ்ஸ்கியின் நட்கிராக்கர் சூட்டின் பகுதிகள் உள்ளிட்ட ரஷ்ய மெல்லிசைகளும், பிரபலமான இந்தி திரைப்படப் பாடலான ‘ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி’யும் இந்த இசைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.