'ராகுலுக்கு விஜய்தான் பிடிக்கும்; காங் நிர்வாகிகள் தவெக ஆபிஸில் நிற்கிறார்கள்!' – ஆதவ் அர்ஜூனா

Spread the love

தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார் ராஜ்மோகன். செங்கோட்டையன், ஜே.சி.டி.பிராபகர், ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது,’1962 க்குப் பிறகு சென்னை எங்களின் கோட்டை என திமுக திமிரில் இருந்தது. கடந்த இரண்டு மாதமாக நாம் பிரசாரத்தை தொடங்கிய பிறகு திமுகவின் சத்தத்தையே காணோம். சென்னையின் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவின் எம்.எல்.ஏக்களையே காணோம். எழும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ யாரென கூகுளுக்கே தெரியவில்லை.

தங்களை எதிர்க்க யாரும் இல்லை என திமுக மமதையில் இருக்கிறது. எடப்பாடி எதற்கெடுத்தாலும் டெல்லி செல்கிறார். அவர் அங்கேயே இருந்துவிடலாம். மக்கள் அவரை மறந்துவிட்டார்கள். திமுகவும் நம்மை பார்த்து பயந்துதான் 26 கட்சிகளோடு கூட்டணி வைத்திருக்கிறது. இன்றைக்கு திமுகவை விட நமக்கு 2% அதிகமாக இருக்கிறது. காங்கிரஸில் 2 குழு இருக்கிறது. ஒன்று ராகுலின் க்ரூப். இன்னொன்று வயதான திமுகவுக்கு ஆதரவான க்ரூப். அந்த கட்சி உருப்படாது என காங்கிரஸின் பொதுச்செயலாளர்களும் மாவட்ட நிர்வாகிகளென 100 பேர் நம் அலுவலகத்தில் வந்து நிற்கிறார்கள்.

ஆதவ்
ஆதவ்

பாண்டிச்சேரியில் காங்கிரஸை தோற்கடிக்க திமுக பாஜகவுடன் கரம் கோத்து கொண்டு செயல்படுகிறது.

ஜெகத்ரட்சகன் மேல் அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. அதை வைத்து பாஜக மிரட்டுகிறது. பாண்டிச்சேரியின் திமுக விசுவாசிதான் நாராயணசுவாமி. அதேமாதிரி, தமிழகத்தில் திமுக விசுவாசி ப.சிதம்பரம். அவர் காங்கிரஸை அழித்துவிட்டார். இப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் நம் அலுவலகத்தில் உட்காந்திருக்கிறார்கள். இன்னும் 2 நாளில் காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள். ராகுல் விஜய் மீதுதான் அன்பு கொண்டவர். வயதான கும்பல்தான் எதையோ பேசி காங்கிரஸை திமுக பக்கம் தள்ளிவிட்டது.’ என்றார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *