`ராகுல்காந்தி இல்லையென்றால் இந்தியாவை விற்றுவிடுவார்கள்!’ – பாஜக-வை சீண்டிய காங்கிரஸ் எம்.பி

Spread the love

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், “புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு கடந்த ஐந்து மாதங்களாக இலவச அரிசியை வழங்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்திற்கான கூலி 350 ரூபாய்.

ஆனால் இங்கு பயனாளிகளுக்கு 320 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது. தற்போது நடைபெறும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம்

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம்

என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி வந்ததில் இருந்து ஆண்டுக்கு 2,000 பேர் என மொத்தமாக 10,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கின்றனர். ஆனால் வெறும் 2,400 பேருக்குத்தான் இவர்கள் வேலை கொடுத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாகத்தான் 12 நாட்கள் பாதயாத்திரை நடத்த இருக்கிறோம். முதல் கட்டமாக 21.01.2026 அன்று தொடங்கும் இந்தப் பாத யாத்திரையை 23 தொகுதிகளில் நடத்த இருக்கிறோம்.

பிரதமர் மோடியை எதிர்க்கும் துணிச்சல் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே இருக்கிறது. அவர் மட்டும் இல்லையென்றால் அவர்கள் இந்தியாவையே விற்றுவிடுவார்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *