ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் எப்போதும் வைக்கப்படும். ராகுல் உள்நாட்டு அரசியலுக்கு தகுதியற்றவர் என சித்தரிக்கும் விதமாக பாஜகவினர் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக அரசு அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார். அப்போது, “ராகுல் காந்தி எங்கே? அவர் வியட்நாம் சென்றதாக நான் கேள்விப்பட்டேன்.
புத்தாண்டு தொடக்கத்தின்போது ராகுல் காந்தி வியட்நாமில் இருந்தார். அங்கு 22 நாள்கள் தங்கியிருந்தார். அவருடைய சொந்தத் தொகுதியில் கூட அவர் இவ்வளவு நாள்கள் தங்கியதில்லை. திடீரென வியட்நாம் மீது அவருக்கு இந்தளவு விருப்பம் வரக் காரணம் என்ன?