நேற்று, முன்னாள் ராணுவத் தளபதி நரவானே தனது “ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ புத்தகத்தில் எழுதியிருந்த வரிகளை நாடாளுமன்றத்தில் படிக்க முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ஆனால், அதை கடைசி வரை படிக்கவே விடவில்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

“நேற்று ஜனாதிபதி உரையின் மீதான தீர்மானத்தில், நான் பேசும்போது, நான் பேச விரும்புவது எந்தப் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிறது என்பதை கூறச் சொன்னீர்கள்.
இன்று நான் பேசும்போது, பத்திரிகையின் பெயரை குறிப்பிட்டேன்.
நாடாளுமன்றத்தின் வழக்கத்தின் படி, உறுப்பினர் பேச விரும்பும் ஆவணம் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அதில் இருக்கும் கருத்துகளுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது சரியாக செய்தாலே, அவைத்தலைவர் உறுப்பினரை அந்த ஆவணத்தைப் படிக்க அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு, அதற்கான பதிலைத் தருவது அரசின் பக்கம் சென்றுவிடுகிறது. அத்துடன் அவைத்தலைவரின் பொறுப்பும் முடிந்துவிடுகிறது.