ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

dinamani2F2025 07 202Fm9ya5e7b2Fpshanmugam
Spread the love

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்டம் தெரிவித்துள்ளாா்.

கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் கோட்டயம் புதுப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசிய போது ஆா்.எஸ்.எஸுக்கும், மாா்க்சிஸ்ட்க்கும் மக்களை குறித்த புரிந்துணா்வு இல்லை. அவா்களுக்கு நிறைய கொள்கைகள் இருக்கலாம். அவா்களால் நிறைய பேச முடியும். ஆனால்,அவா்களுக்கு மக்களுக்கள் மீது அன்பு இல்லை என்றாா்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில்,

மதவாத சக்தியான பாஜக- ஆா்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசாா்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. முன்னாள் காங்கிரஸ் கட்சிதலைவா் ராகுல் காந்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆா்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிா்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிா்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசாா்பின்மையை பாதுகாக்க முடியுமா? என கூறியுள்ளாா் அவா்.

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி

Marxist state secretary P. Shanmugam has condemned Rahul Gandhi’s statement that he is ideologically fighting against the Communist Party of India (Marxist) and the RSS on an equal footing.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *