ஆனால், இந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக கௌரவிக்கும் முடிவுடன், முன்னுரிமை அட்டவணையின்படி இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டதாக, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் இருக்கை குறித்த நிகழ்வுக்கு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரீயா ஸ்ரீனேட் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுப்ரீயா கூறியதாவது, “சிறிய மனப்பான்மை கொண்டவர்களிடமிருந்து பெருந்தன்மையான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. சுதந்திர தின நிகழ்ச்சியின்போது, ராகுல் காந்தியை ஐந்தாவது வரிசையில் நிறுத்த, மோடியின் முடிவு அவரது விரக்தியைப் பிரதிபலிக்கிறது.
இந்த நிகழ்வு ஜனநாயகம், ஜனநாயக மரபுகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மீதான மரியாதை இல்லாமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.