“ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?" – முதல்வர் ஸ்டாலின்

Spread the love

சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆ டெஸ்டினி’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்துக்கு இன்னும் ஆளும் பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் , சீன ஊடுருவல் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி, நரவானே எழுதிய புத்தகத்திலிருந்து சில வரிகளை படிக்க முயன்றார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

அதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் படிக்கவே விடவில்லை. மேலும், சீனா ஊடுருவல் பேச அனுமதியும் மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கௌரவத்திற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும், எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?

தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நலன்கள் சார்ந்த விவகாரங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், உரிய விளக்கங்களை அளிக்கவும் வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் நிலைநாட்ட, இந்த இடைநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் சபாநாயகர் ஓம்.பிர்லாவை டேக் செய்து குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *