அகமதாபாத்: ஜிஎஸ்இசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ரமன்லால் ஷா, அகமதாபாத்தில் உள்ள இலங்கைக்கான கௌரவ தூதராக இலங்கை அரசு நியமித்துள்ளது.
ராகேஷ் ரமன்லால் ஷா தனது நியமன ஆணையை உயர் ஸ்தானிகர் க்ஷேனுகா செனவிரத்னவிடமிருந்து பெற்றுக்கொண்டதாக உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசுடனான இலங்கையின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த பதவியின் உருவாக்கப்பட்டது.