வார முதல் நாளில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள் தோறும் உயர்ந்து வருகிறது. 1 லட்ச ரூபாய் சவரன் தங்கம் விலை உயர்ந்துவிட்ட நிலையில், வெள்ளி விலையும் கவலை அளிக்கும் வகையில் உயர்ந்து நகைப்பிரியர்களை கவலை அடைய செய்து வருகிறது.
நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிலோ ரூ 3 ஆயிரம் விலை உயர்ந்து விற்பனை ஆனது.
இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,800-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.244-க்கும் விற்பனையாகிறது. கிலோ வெள்ளி ரூ 10 ஆயிரம் உயர்ந்து உள்ளது.
தொடர்ந்து விலை உயர்ந்து வரும் தங்கம், வெள்ளி முதலீட்டாளர்கள் மற்றும நகைப்பிரியர்களை அதிர்ச்சி உள்ளாக்கி இருக்கிறது.
