நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,640க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,700க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதே போன்று நேற்று வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,71,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,02,960 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ஒருகிராம் தங்கம் ரூ. 12,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று இன்று வெள்ளி கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.283-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.12,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,83,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
