ஹோட்டலில் வேலை பார்த்ததால் இந்த சமையல் சம்மந்தமான வேலை கொஞ்சம் சுலபமா இருந்துச்சு, ஆரம்ப காலத்துல இருந்து இப்போ வரை சைக்கிள்ள தான் வித்துட்டு இருக்கேன். அப்போ ஒரு ரூபாய், ஐம்பது பைசா போன்ற விலைகளில் விற்க ஆரம்பித்தேன். அதன் பின் அல்வா, பால்கோவா, சிப்ஸ், குலாப்ஜாமுன் என பலக்காரங்களையும் விற்கத் தொடங்கினேன்.
ஆண்டிபட்டி முழுவதையும் சுற்றி விடுவேன், ஒரு நாள் ஒரு பகுதி என பிரித்து திங்கள் அன்று பாப்பாம்மாள்புரம், செவ்வாய் அன்று சக்கம்பட்டி கிழக்கு, புதன் அன்று சக்கம்பட்டி வடக்கு, வியாழன் அன்று சத்யாநகர் என வாரம் முழுவதும் விற்க செல்வேன்.

முறுக்கு, அல்வா, சிப்ஸ் எல்லாம் 1 ரூபாயில இருந்து விற்க ஆரம்பிச்சு இப்ப ஒரு கப் அல்வா, பால்கோவா 10 ரூபாய், ஒரு பாக்கெட் சிப்ஸ், முறுக்கு 10 ரூபாய் என விற்கிறேன்.
இந்த தொழிலுக்கு வந்ததுக்கு அப்புறம் என் முழு நேர தொழிலே இதுதான். நான் விக்கிற எல்லா பொருளையும் சொந்தமா நானே தயாரிப்பேன், என் மனைவியும் எனக்கு ஓத்தாசையாக இருப்பார்.
எந்த ஒரு ராசாயன பொருளையும் உபயோகப்படுத்தாமல் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கிறேன். ஓமம், மிளகு, சீரகம், கோதுமை, பால் இது போன்ற சுத்தமான பொருள்களை உபயோகிப்பதால் அது ஆரோக்கியமாகவும் இருக்கும், அன்றன்றைக்கு செய்து அன்றே விற்று விடுவேன்.