ராஜபாளையம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா சமுதாய அமைப்புகள் சார்பில் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்கு, எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரவை தலைவர் ஜம்புகேஸ்வரன் தலைமை வகித்தார்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குறித்து கோயம்புத்தூரில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த நிகழ்ச்சியில் விஸ்வகர்மா சமுதாயம் குறித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்தும், அதேபோல் தச்சு, தங்க நகை, பாத்திரம், இரும்பு, சிற்பம் ஆகிய 5 தொழில்கள் செய்பவர்கள் மட்டுமே விஸ்வகர்மா சமூகத்தினர், ஆனால் மத்திய அரசின் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் 18 தொழில் செய்பவர்களை சேர்த்திருப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் மாடமூர்த்தி, ஐயப்பன், ராஜகோபால் மற்றும் அனைத்து விஸ்வகர்மா சமுதாய அமைப்புகள், அனைத்திந்திய உழைக்கும் படைப்பாளி வாழ்வுரிமை கட்சி, எம்.கே தியாகராஜ பாகவதர் பேரவையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.