ராஜஸ்தான் கலக்கல்! 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி!

Dinamani2f2025 04 052fvb3n605m2fpti04052025000516b.jpg
Spread the love

சண்டீகர்: நடப்பு ஐபிஎல் தொடரின் 18-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களால் அந்த அணி 205 ரன்களைக் குவித்தது.

அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே திரட்டியது.

இதன்மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை ருசித்தது.

இதையும் படிக்க: ஜெய்ஸ்வால், ரியான் பராக் அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 206 ரன்கள் இலக்கு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *